காத்தான்குடி பெருநாள் பஸாரில் ஆற்றிற்கு நடுவில் மிதக்கும் சிறிய உணவகம்

DSC09112பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடிப் பிரதேசத்திற்கு கிண்ணியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட படகுப்பாதை திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அது இம்முறை ஆற்றிற்கு நடுவில் மிதக்கும் சிறிய உணவகமாக இயங்கவுள்ளதாகவும் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ். எச். எம். அஸ்பர் தெரிவித்தார்.

இம்முறை பெருநாள் பஸார் காத்தான்குடி ஆற்றங்கரை குபாப் பகதியில் இடம்பெறவுள்ளதையிட்டு விடுத்த அறிக்கையிலேயே அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், வழமையாக பெருநாள் பஸார் காத்தான்குடி கடற்கரை வீதியில் இடம்பெறுகின்ற அதேவேளை இம்முறை காத்தான்குடிஆற்றங்கரை பிரதேசத்தில் நடத்த காத்தான்குடி நகர சபை தீர்மானித்துள்ளது.

குறித்த ஆற்றங்கரைப் பகுதியை அபிவிருத்தி செய்யும் வண்ணமும் காத்தான்குடிக் கடற்கரையில் பெருநாள் பஸார் இடம்பெறுவதின் மூலம் காத்தான்குடிப் பிரதான வீதியைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இதனால் நிறைய வீதி விபத்துக்கள் இடம்பெறுவதுடன் சிறுபிள்ளைகள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.இதனாலேயே இம்முறை குறித்த பகுதியில் பெருநாள் பஸாரை நடாத்த தீர்மானித்துள்ளோம். இப்பெருநாள் பஸாரில் பாதாள கிணற்றுக்குள் பயங்கர மோட்டார் சைக்கிள்,சாண்டோர் சங்கரதாஸ் சாகச நிகழ்வு,சிறுவர்களுக்hன புகையிரதம்,கிறுக்கு ஊஞ்சல் என்பன உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

பெருநாள் தினத்திலிருந்து தொடர்ந்து மூன்று நாளைக்கு இடம்பெறவுள்ள குறித்த பெருநாள் பஸார் நிகழ்வில் 12வயதுக்கு மேற்பட்ட பெண்கள் யாரும் கலந்து கொள்ள முடியாது எனவும் கலந்து கொள்ளாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை பெண்களுக்கென தனியாக நாளாவது நாள் ஒரு பெருநாள் நடத்துவது தொடர்பாக யோசித்துள்ளதாகவும் அது தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment