வரலாற்றில் முதற்தடவையாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த இன நல்லுறவு பேணும் இப்தார் நிகழ்வு

batticaloa (1)– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் படை பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் ஒருங்கினைப்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் வரலாற்றில் முதற்தடவையாக  ஏற்பாடு செய்த இன நல்லுறவு பேணும் இப்தார் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய முன்றலில் இடம்பெற்றது.

 இங்கு விஷேட மார்க்க சொற்பொழிவை மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி நளீம் (பலாஹி) நிகழ்த்தினார்.

 மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.கே.கிங்ஸ்லி குனசேகர தலைமையில் இடம்பெற்ற இவ் இன நல்லுறவு பேனும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன், மட்டக்களப்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அனுருந்த பண்டார ஹக்மன,வாழைச்சேனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன,மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரி சஞ்சிவ,மட்டக்களப்பு மாநகர சபை ஆனையாளர் எஸ்.சிவநாதன்,மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் கலீல் ஹாஜி, மட்டக்களப்பு பொலிஸ் விஷேட அதிரடிப்படை,இராணுவம்,கடற்படை,விமானப்படை உயரதிகாரிகள் மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்கள் ,தமிழ்-முஸ்லிம்,சிங்கள,கிறிஸ்தவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

 கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் முழு ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முதற்தடவையாக இடம்பெற்ற இவ் இன நல்லுறவு பேனும் இப்தார் நிகழ்வு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய நிலையத்தின் முஸ்லிம்-தமிழ்,சிங்கள,கிறிஸ்தவ பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment