புத்தளத்தில ஷவ்வால் பிறை தென்பட்டதான செய்தி தவறானது

crescent moon[1]-AK 42

கொழும்பு: இன்று மாலை புத்தளத்தில் ஷவ்வால் பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறுந்தகவல்கள் சில நாடு பூராகவும் பரப்பப்பட்டிருந்ததுடன் மக்கள் நாளை பெருநாளைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஆயத்தமாகி வந்தனர்.

எனினும் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் ஒன்றுகூடியுள்ள பிறைக்குழுவினர் இச்செய்தி ஊர்ஜிதப்படுத்தப்பட்டதல்ல எனவும், எமது முடிவு இன்னும் சில மணித்தியாலங்களுக்குள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுரைக்கும் இலங்கையில் எப்பாகத்திலும் ஷவ்வால் பிறை தென்பட்டதாக எவரும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

2 responses to “புத்தளத்தில ஷவ்வால் பிறை தென்பட்டதான செய்தி தவறானது”

  1. இன்னும் உங்களுக்கு யார் ஊர்ஜிதப்படுத்த வேண்டம் மஹிந்தயா?

Leave a comment