பிறை பேதமில்லா பெருநாள் வேண்டும் (நோன்புப் பெருநாள் சிறப்புக் கவிதை)

eid– இல்மி அஹமட் லெவ்வை

 மறுமையின்  

விடியலுக்கு  

மார்க்கம் சொன்ன  மாதமே

☾ ☾ ☾ ☾ ☾ ☾ ☾

கறைகளைக்  கழுவி  

மறையினை  

மணக்க செய்த  மாதமே

☾ ☾ ☾ ☾ ☾ ☾ ☾

இனிய  இரவுகளையும்  

இச்சைகளையும் அழ்ழாஹ் !

உனக்காகவே  ஒதுக்கி வைத்தோம்

☾ ☾ ☾ ☾ ☾ ☾ ☾

நாங்களும்  

எங்கள்  துணைகளுமாய்  

இராமுழுதும்  எழுந்தடித்தோடினோம்  

எங்கள்  றப்பே உனை  சுஜூதிப்பதற்காக!

☾ ☾ ☾ ☾ ☾ ☾ ☾

சக்காத் கடமைக்கு  அப்பால் ..

சதா  சதக்காவும்  

இறைத்து நின்றோம்  

வட்டியில் வீழ்ச்சி என்று  

வந்த ரமழான்  சொன்னதனால் !

☾ ☾ ☾ ☾ ☾ ☾ ☾

திக்கித்திக்கி  

திருத்தம்  குறைவாக ஓதினாலும்  

ஏற்றங்களும் உண்டு

என்ற  உண்மையினை  கற்றதனால்  

உயர்வான  மறையதனை  

ஓதியும் முடித்தோம்  பல முறை

☾ ☾ ☾ ☾ ☾ ☾ ☾

அத்தனையும்  அழ்ழாஹ்  

உனக்கான  பணிவுகள்

இந்த  உரிமை வரம்புக்குள் நின்று  

நாங்கள் ஒரு  விண்ணப்பம்!

☾ ☾ ☾ ☾ ☾ ☾ ☾

பெற்ற தாய் ஒருநாளும்  

பிறந்த மகன் மறுநாளுமாய்  

பெருநாள்  பிழவு வேண்டாம்  

ஒற்றுமையாய்  உரத்து நாங்கள்  

உன்தக்பீர் சொல்ல வேண்டும்

 ☾ ☾ ☾ ☾ ☾ ☾ ☾

மாற்றமில்லா  முதல்பிறையால்  

மகிழ்வோடு  நோன்பு நோற்றோம் 

இவ்வாறே  எத்திசையும்  பிறை பேதமில்லா  

பெருநாளாய்  பிறக்க  பிராத்திப்போம்!

Published by

Leave a comment