பிறைச் செய்தி முறியடிப்பு!

eid_mubarak[1]– AK-42

கொழும்பு: ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை இன்று மாலை கிண்ணியா மற்றும் புத்தளம் பிரதேசங்களில் காணப்பட்டதாக பிறையைக் கண்டு ,  மௌலவி றியாஸ் 0775290014 (ஜாமியதுல் அஸ்ஹர் இமாம்), முகம்மது நயீம் 0774147651, எம். ஜூஹார்தீன் 07526441313 ஆகியோர் கொழும்பு பிறைக்குழுவுக்கு அறிவித்திருந்தனர். எனினும் இத்தகவல்கள் ஏற்க முடியாது என கொழும்பு பெரியபள்ளிவாயல் பிறைக்குழு நிராகரித்ததாக சம்பந்தப்பட்டவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் மத்திய கிழக்கு நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இன்று மாலை ஷவ்வால் பிறை கண்டதையடுத்து வியாழக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

இவ்வாறான பிறை கண்ட வியடத்தில்  இதற்கு முன்னரும் சர்ச்சைகள்   இலங்கையில் ஏற்பட்டிருந்தன.

இலங்கையில் ஷவ்வால் பிறை தென்பட்டதை அடுத்து பலர் வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடுகின்றனர். காத்தான்குடியிலும்  வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடுவதாக சில அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

Published by

Leave a comment