பிரித்தானியாவில் வியாழக்கிழமை நோன்புப் பெருநாள்

East_London_Mosque_Front_View[1]-MJ

லண்டன்: உலகில் பல பாகங்களிலும் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை இன்று தென்பட்டதைத் தொடர்ந்து, ஓகஸ்ட் 8ம் திகதி வியாழக்கிழமை நோன்புப் பெருநாள் என லண்டன் ஜூம்ஆப்பள்ளிவாயல்கள் அறிவித்திருக்கின்றன. கிழக்கு லண்டன் ஜூம்ஆ பள்ளிவாயல், ரெடிங்-அஹ்லுல் ஹதீத்  ஜூம்ஆ பள்ளிலாயல் ஆகியவை சற்று முன்னர் வியாழக்கிழமை நோன்புப் பெருநாள் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றன.

பெரும்பாலான இடங்களில் திடல் தொழுகைகளுக்கான ஏற்பாடுகள்  வழமைபோலவே இடம்பெறும். பெருநாள் தொழுகை காலை 9 மணியிலிருந்து ஆரம்பமாக இருப்பதாக அவ்வபப்பிரதேச பள்ளிவாயல்கள் தெரிவித்திருக்கின்றன.

East_London_Mosque_Front_View[1]

Published by

Leave a comment