கொழும்பு: இலங்கை பிறைக் குழுவினர் இன்று மஹ்ரிப் தொழுகையிலிருந்து இரவு 10 மணிவரைக்கும் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் நோன்புப் பெருநாளைத் தீர்மானிக்கும் ஷவ்வால் மாதத்தின் பிறை பற்றிய தகவலைப் பெற்று அதனை பொதுமக்களுக்கு அறிவிக்க குழுமியிருந்தனர்.
இரவு 10 மணிவரைக்கும் இலங்கையில் எப்பாகத்திலும் ஷவ்வால் பிறை தென்பட்டதாக ஊர்ஜிதமான தகவல்கள் கிடைக்கப்பெறாததால், ரமழான் மாத்தினை 30 தினங்களாக பூர்த்திசெய்வதன் பிரகாரம், இன்ஷாஅல்லாஹ் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் தினமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாயல் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
![eid[2]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/eid2.gif?w=150&h=112)
Leave a comment