தலை பிறை (நோன்புப் பெருநாள் சிறப்புக் கவிதை)

moon-பிரகாசக்கவி

ஷவ்வால் தலை பிறையே  ஓடி வா !

சந்தோஷ பூ மழை  பொழிந்து வா !

தரணியெங்கும் தக்பீர்  முழங்கி வா !

☪ ☪ ☪ ☪ ☪ ☪ ☪ ☪

பெருநாள் எனும் பேர் உவகை  கொண்டு வா !

யுத்தமில்லா என் நாட்டில்  சத்தம் இன்றி நீ வா !

இங்கே  இனவாதம் இறந்துபோக  

இறையோனிடம் இருகரம்  ஏந்தி வா !

ஐவேளை தொழுகின்ற  

அரும் பயிற்சி அளித்தவனே  நீ வா !

☪ ☪ ☪ ☪ ☪ ☪ ☪ ☪

என் ஆயுள் எல்லாம்  

அல்லாஹ்வை நான் வணங்க  

தக்வா வெனும் இறையச்சம் என்னுள் தா !

☪ ☪ ☪ ☪ ☪ ☪ ☪ ☪

மூவினமும்  முக்கனியாய் தான் வாழ  

முழு நிலவின்

முதல் கனியே  நீ வா !

☪ ☪ ☪ ☪ ☪ ☪ ☪ ☪

யுத்தம் இல்லா என் நாட்டில்  

சத்தமின்றி சமாதானம்  நீ தா !

வான் பிறையே நீ வா !

வசந்தங்கள் பல கோடி இங்கே நீ தா !

Published by

Leave a comment