பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு கடந்த இரண்டாண்டுகளாக சிறப்பாக நடத்திய நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை மற்றும் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இவ்வருடமும் (1434 / 2013) கீழ்க்கண்ட முறையில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்…
நாள்:
ஹிஜ்ரீ 1434 ஷவ்வால் பிறை 1 (08.08.2013 வியாழக்கிழமை அல்லது 09.08.2011 வெள்ளிக்கிழமை)
நேரம்: சரியாக காலை 6:00 மணிக்கு…
இடம்:
K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல், அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல்,
(ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில்), ஃகைத்தான், குவைத்.
-
காலை 6:00 மணி முதல் 6:30 வரை தக்பீர் முழக்கம்
-
காலை 6:30 மணி முதல் 7:15 வரை சிறப்பு சொற்பாழிவு
சிறப்புரை:
தமிழகத்திலிருந்து வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர் தமிழகத்தின் மூத்த ஆலிம் பெருந்தகை மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் ஆன்மீக அறிவொளி அ. முஹம்மது ஷப்பீர் அலீ ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் (நிறுவனர் & முதல்வர், ஜாமிஆ மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரி, சென்னை)
-
பெருநாள் தொழுகை விளக்க சிற்றுரை &பெருநாள் தொழுகை (மவ்லவீ ஹாஃபிழ் M. முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ, துணைத் தலைவர், K-Tic)
-
பெருநாள் ஃகுத்பாப் பேருரை (மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., பொதுச் செயலாளர், K-Tic)
-
சிறப்பு துஆ மஜ்லிஸ்
- வாழ்த்துக்கள் பரிமாற்றம்
குறிப்பு:
- பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.
- ஜமாஅத்தாக தொழுகையும், ஃகுத்பாவும் கண்டிப்பாக இரண்டாவது தடவை நடத்தப்பட மாட்டாது.
- குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், இந்தப் பெருநாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.
பகல் முழுவதும் பசித்திருந்து தாகித்திருந்து உண்ணா நோன்பிருந்தோம்!
இரவு முழுவதும் விழித்திருந்து இறைவனருள் வேண்டி வணங்கினோம்!!
இனிய லைலத்துல் கத்ரை தேடி அல்லாஹ்விடம் தவமிருந்தோம்!
இறுதிப் பத்தில் இறையருளை இணைந்தே இறைஞ்சினோம்!!
இல்லாருக்கும், எளியோருக்கும் இயன்றதை வழங்குவோம்!
இந்த ஈதுல் ஃபித்ரை இனிமையாய் கொண்டாடி மகிழ்வோம்!!
குவைத் வாழ் மக்கள் உட்பட உலக மக்கள் அனைவருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் இதயங்கனிந்த இனிய ஈகைத் திருநாள் / நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
ஈத் முபாரக்!!
குல்லு ஆமின் வஅன்(த்)தும் பி ஃகைர்!!!
தகப்பலல்லாஹு மின்னா வ மின்(க்)கும்….
மேலதிக விபரங்கள் இணைப்பில்…
அனைவரும் குடும்பத்துடன் வருக…! அன்பர்களையும் அழைத்து வருக…!! அல்லாஹ்வின் அளவிலா அருள்மழையில் நனைக….!!!
கூடுதல் தகவல்களுக்கும், இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.
துரித சேவை அலைபேசி: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
கூகுள் குழுமம்: http://groups.google.com/group/q8tic
நன்றி! வஸ்ஸலாம்.
![K-Tic Tamil Khuthba Masjid[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/k-tic-tamil-khuthba-masjid1.jpg?w=150&h=112)
![K-Tic Tamil Khuthba Masjid[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/k-tic-tamil-khuthba-masjid1.jpg?w=780&h=585)
Leave a comment