இப்தார் நிகழ்வுகளால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்ற 29 சகோதரர்கள்

100_2508யன்பு: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சவுதி அரேபியா யன்பு இண்டஸ்ரியல் சிட்டி  தஃவா நிலையத்தின் மூலமாக வருடந்தோறும் றமழான் மாதம் நோன்பு 30 நாட்களும் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகள் இரண்டு இடங்களில் நடைபெறுவது வழக்கம்.

வழமைபோன்று இவ்வருட றமழானிலும் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகள் யான்பு இண்டஸ்ரியல் சிட்டி தஃவா நிலையத்தின் ஒருங்கிணைப்பாளரும் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர்  உப தலைவருமான சகோதரர் ஹபீபுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் இரு வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒன்று தஃவா சென்றரில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்களுக்காகவும் மற்றொன்று பாலைவனப் பகுதியில் ஒட்டகப் பண்னை பராமரிப்பாளர்கள் மற்றும் தோட்டவேலை செய்யும் சகோதரர்களுக்காகவும் இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது. தொடராக நடைபெற்றுவந்த இவ் இப்தார் நிகழ்வுகளில் அவ்வப்போது மாற்றுமத சகோதரர்களும் பலர் கலந்துகொண்டனர்.

அவ்வாறு றமழானில் இப்தார் நிகழ்வுகளில் கலந்தக்கொண்டவர்களில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 29 சகோதரர்கள்; இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்தும் இறைவனுக்கே.

தகவல்;

இஸ்லாமிக் சென்றர்
காத்தான்குடி.

100_2508

DSCN1274

DSCN1316

Published by

Leave a comment