இந்தியா-பாக்கிஸ்தான் துப்பாக்கி மோதல்: 2 பாக். வீரர்கள் காயம்!!

india-OiT

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் இன்று அதிகாலை இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இதில் 2 பாகிஸ்தான் வீரர்கள் படுகாயமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டைக் கோட்டை கடந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலை ஊரி செக்டார் பகுதியில் கமல்கோட் என்ற இடத்தில் இரு ராணுவத்தினரிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் இம்மோதல் நீடித்திருக்கிறது.

இதில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாடு உறுதி செய்துள்ளது. தொடர்ந்தும் துப்பாக்கி சண்டை சப்தங்கள் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

india

 

Published by

Leave a comment