மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அமைந்துள்ள ஒல்லாந்தர்கோட்டையினைச் சுற்றியுள்ள அகழியினைச் சுத்தப்படுத்தி திருத்தும் பணிகளில் தொல்பொருள் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
இக் கோட்டையின் அழகுபடுத்தல் 30 மில்லியன் ரூபா செலவில் ‘தேசத்துக்கு மகுடம்” வேலைத்திட்டத்தின் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
2.995 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டத்துக்கககு இலங்கையின் சிரேஷ்ட நகர திட்டமிடலாளர் பேராசிரியர் பாலி விஜயரத்ன ஆலோசனை வழங்கல்- மேர்ப்பார்வை செய்தல்- வழிநடத்தல் என்பவற்றினை மேற்கொண்டு வருகிறார்.
நீண்ட காலமாக எவ்வித பராமரிப்பும் இன்றி இருந்த அகழியை சுத்தப்படுத்தி அழகுபடுத்துவதன் மூலம் மாவட்ட செயலகம் அமைந்துள்ள கோட்டை மேலும் அழகுப் பொலிவுள்ளதாக மாறும்.
ஒல்லாந்து கோட்டை என அழைக்கப்படும் டச்சுக் கோட்டையானது 1628ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு- ஒல்லாந்துக்காரரால் 1638இல் கைப்பற்றப்பட்டது.
இலங்கையிலுள்ள அழகிய சிறிய ஒல்லாந்துக் கோட்டைகளில் இதுவும் ஒன்று. மட்டக்களப்பு தீவுகளில் ஒன்றான புளியத்தீவில் இக்கோட்டை அமைந்துள்ளது. (அ-த-தி)
![tb[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/tb1.jpg?w=200&h=150)
Leave a comment