காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்த புனித நோன்பு திறக்கும் ‘இப்தார்’ நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மாலை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அஷ் ஷஹீத் எ.அஹ்மத் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் அதன் தலைவர் எம்.ரீ.எம். காலித் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக், மஃஹதுஸ் ஸுன்னா பெண்கள் அரபுக் கல்லூரி தலைவர் அஷ்ஷெய்க் எம்.ரிஸ்வான் (மதனி) , பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி ரமீஸ்(ஜமாலி), உறுப்பினர்கள், கல்லடி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் முகாந்திரம், மேஜர் ஹெட்டிகொட, களுவாஞ்சிகுடி முகாம் பொறுப்பதிகாரி கொட்வின் டி அல்விஸ், ஆரையம்பதி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் சமன் பெரேரா,காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன, சிவ ஸ்ரீ சோபித்த குருக்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது மஃஹதுஸ் ஸுன்னா பெண்கள் அரபுக் கல்லூரி தலைவர் அஷ்ஷெய்க் எம்.ரிஸ்வான் மதனியினால் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டமைi குறிப்பிடத்தக்கது.

Leave a comment