‘எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் எந்த ஒரு தாக்குதலையும் தமது ராணுவம் மேற்கொள்ளவில்லை’: பாகிஸ்தான்

pak-MJ

டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் எந்த ஒரு தாக்குதலையும் தமது ராணுவம் மேற்கொள்ளவில்லை என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டு அருகே இந்திய நிலைகள் மீது இன்று அதிகாலை இடம்பெற்ற 5 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்திற்கு பாக்கிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டியிருந்தததையடுத்து, ஊடகங்களுக்கு பேசிய பாகிஸ்தான் இராணுவ அதிகாரி, எமது படையினர் இத்தாக்குதலை நடாத்த வில்லை எனவும், எந்த ஒரு யுத்த மீறல் சம்பவத்தையும் பாக்கிஸ்தான் மேற்கொள்ளாது எனவும் உறுதியுடன் தெரிவித்தார்.

இதற்கிடையில் இச்சம்பவத்தை நடாத்தியது பாக்கிஸ்தான் ஆயுதக் குழுக்களே என தற்பொழுது தெரியவருகிறது. 20 பேர்கள் கொண்ட ஓர் ஆயுதக் குழுவே இத்தாக்குதலை நடாத்தியதாக தற்பொழுது செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

 

Published by

Leave a comment