‘த.தே.கூட்டமைப்பின் இன்றைய கவன ஈர்ப்புப் போராட்டம் அரசாங்கத்திற்கும் இரானுவத்தினருக்கும் முதல் எச்சரிக்கை மணி’ : மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம்

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு:  மட்டக்களப்புமாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கவன ஈரப்புப் பேரணி இலங்கை அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் படையினருக்கும் விடுக்கும் முதல் எச்சரிக்கையாகும் என தமிழ்த் தேசியக் சுட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் தெரிவித்தார்.

 சிலைஉடைப்பை கண்டித்தும் குற்றவாளிகள் கைதுசெய்யடாததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட  கவனயீர்ப்பு பேரணியொன்று மட்டக்களப்பு குருக்கள்மடம் மாங்காடு பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

 அது முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த இரு மாதங்களாக மட்டக்களப்பு மாங்காடு,குருக்கள்மடம் ஆகிய இரு பகுதிகளில் கோயில்கள் தாக்கப்பட்டு உடைமைகள் சூரையாடப்பட்டன.

இது தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையிலேயே குறித்த கவனஈர்ப்புப் பேரணி நடைபெறுகின்றது.இது வன்முறையற்ற கலகம் இல்லாத போராட்டமாகும்.

 இது மத ரீதியான போராட்டம்.இந்த ஜனநாயக நாட்டில் மத ரீதியான உரிமைகளுக்காகத்தான் இந்த பேரணியையும் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

இது இவ்வாறிருக்க இரானுவத்தினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை கள்வர்களைப் பார்ப்பது போல் பார்க்கின்றனர்.நாங்கள் பொதுமக்களின் சூறையாடுவதற்காகவோ அடுத்தவர்களின் உயிர்களைப் பறிப்பதற்காகவோ நாங்கள் போராடவில்லை.

தமிழர்களை தலைமை தாங்கி செயற்படுகின்ற நாங்கள் தமிழர்களுக்காகப் போராடுகின்றோம்.அவர்களின் மத சுதந்திரத்திற்காக போராடுகின்றோம்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இரண்டு கோயில்களில் சிலைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சூரையாடப்பட்டன.

 அவற்றைச் செய்தவர்கள் யார் என்று கண்டுபிடித்துத் தருமாரு பொலிஸாரிடமும் இரானுவத்தினரிடமும் கேட்டிருந்தோம்.

ஆனால் இது வரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.எனவே உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.இது இந்த அரசாங்கத்திற்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோருக்கமான முதலாவது எச்சரிக்கை மணி.

இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மாபெரும் பகிரங்க வெகுஜன போராட்டத்தை நடத்த வேண்டி ஏற்படும்.

 எனவே இது தொடர்பில் அதிகூடிய கவனெடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா.அரியநேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், இரா. துரைரட்ணம், பிரசன்னா இந்திரகுமார்,அம்பாறை மாவட்ட த.தே.கூ மாகாண சபை உறுப்பினர் கலையரசன்,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர்கள்,உறுப்பினர்கள்,கோயில் தர்மகர்த்தாக்கள் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.

Published by

Leave a comment