இஸ்ரேலில் கால் பதித்த மெஸ்ஸி!

messiMJ

ஜெரூஸலம்: இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் சிறுவர்களுக்கிடையில் இடம்பெறும் அமைதிக்கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிக்கு விசேட விருந்தினர்களாக உலகப் புகழ்பெற்ற உதைப்பந்தாட்ட வீரர்களான ஆர்ஜன்டீனா மற்றும் பார்சிலோனா அணியின் நட்சத்திரமான லியனல் மெஸ்ஸி மற்றும் ஸ்பெய்ன் அணியின் தேசிய வீரர்களும் பார்சிலோனா அணியின் வீரர்களும் இஸ்ரேலில் கால்பதித்திருக்கின்றனர.

இதன் காரணமாக இரு நாடுகளினது உதைப்பந்தாட்ட இரசிகர்கள் மாத்திரமன்றி, பொதுமக்களும் மிகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இவ்வீரர்கள் குழு பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸையும், இஸ்ரேலியப் பிரதமர் சைமன் பீரிஸையும் சந்திக்க இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

‘இரு நாட்டு சிறுவர்களினது ஒற்றுமைக்கு இது ஓர் நல்லதொரு தருணம்’ என மஹ்மூத் அப்பாஸ் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றார்.

இரு பயிற்சி முகாம்களுக்கும் செல்லவுள்ள இவ்வீரர்கள் இரு நாடுகளினது சிறுவர்களுக்கும் உரிய விளையாட்டுப் பயிற்சியை வழங்கி, இப்போட்டியை சிறந்த முறையில் அமைதியாக இடம்பெறுவதற்கு உறுதுணையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் இடம்பெற்ற இவ்வாறான போட்டியொன்றில் இஸ்ரேலில் எதிர்ப்புக் கிளம்பியதால் போட்டி தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

messi

Published by

Leave a comment