கொழும்பு: மாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக விருந்தால் அமைச்சுப் பதவியையும் அரசின் வளங்களையும் துறந்து விடுவேன் என்று அமைச்சர் பசீர் சேகு தாவூத் உறுதிபடத் தெரிவித்தார். கட்சிக்குள்ளிருந்து கொண்டு ஒருவர் கட்சிக்கெதிராக எவ்வாறு பிரசாரத்தில் ஈடுபடுவது மனச் சாட்சிக்கு விரோதமோ அதேபோன்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு எவ்வாறு அரசுக்குகெதிராக பிரசாரத் தில் ஈடுபட முடியுமென்றும் அவர் வினவினார்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு தனித்துப் போட்டியிடக் கூடாது என அரசியல் உயர் பீடக் கூட்டத்தில் வலியுறுத்தினேன் என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சுப் பதவியிலிருந்து கொண்டு தனித்துப் போட்டியிடும் முகாவுக்காக பிரசாரப் பணியில் ஈடுபட என்னால் முடியாது.
அரசின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு தனித்துப் போட்டியிடக் கூடாது என்பதே என் நிலைப் பாடு என்றும் அவர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பிரதி அமைச்சர் பதவியைத் துறந்து விட்டே கட்சிக்காக தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொண்டேன் என்றும் அவர் ஞாபகப்படுத்தினார். இம்முறை தேர்தலில் இது தொடர்பில் எத்தகைய முடி வையும் தாம் மேற்கொள்ளவில்லை என்றார்.
-தினகரன்
Leave a comment