தாக்குதல் எச்சரிக்கையையடுத்து அவசராமாக மூடப்பட்ட யமன் நாட்டின் பிரித்தானிய, பிரான்ஸ், ஜேர்மனி தூதரகங்கள்!

yemen-MJ

லண்டன்: யமன் நாட்டில் தற்பொழுது நிலவும் அசாதாரண சூழ் நிலையையடுத்து பிரித்தானிய தூரகம் உட்பட மேற்கத்தேய நாடுகளின் ஏனைய தூதரகங்களும் அவசரமாக மூடப்பட்டுள்ளன. பிரித்தானியத் தூதரகம் யமன் கிளர்ச்சியாளர்களால் எந்நேரத்திலும் தாக்கப்படக்கூடும் என்ற அமெரிக்க உளவுப்பிரிவின் எச்சரிக்கையையடுத்து அவசரமாக பிரித்தானியத் தூரகம் மூடப்பட்டதுடன், தூதரகத்தலிருந்த அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.

இதனையடுத்து யமனின் தலைநகரான சனாவில் அமைந்துள்ள பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாட்டின் தூதரகங்களும் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன.

21 வெளிநாட்டு தூதரகங்களை இவ்வாரத்துக்குள் தாக்கவிருப்பதாக கிடைத்த அல்கைதா இயக்கத்தின் இரகசிய குறுந்தகவல் பரிமாற்றத்தையடுத்து, அமெரிக்காவின் யமன் உளவுப் பிரிவு, இவ் அவசர வேண்டுகோளையும் எச்சரிக்கைiயும் விடுத்திருக்கின்றது.

yemen (2)

yemen

Published by

Leave a comment