முஷர்ரப்பை சுட்டுக்கொல்ல தலிபான்கள் அமைக்கும் வியூகம்!

19-musharraf13-300[1]-OIT

இஸ்லாமாபாத்: முன்னாள் அதிபர் முஷாரப்பின் பண்ணை வீட்டுக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தி முஷார்ரப்பை சுட்டுக்கொல்ல திட்டமிட்டுருப்பதாக அதிரடித்தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.பாகிஸ்தான் தலிபான்கள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்புமிக்க சிறைக்குள் புகுந்து தாக்கியதால் தெம்பாகியுள்ள தலிபான்கள் அடுத்தடுத்து பெரிய தாக்குதல்களுக்கு திட்டமிட்டு வருகின்றனர் .முஷாரப்பின் பண்ணை வீடும் தாக்குதல் திட்டத்தில் உள்ள ஒன்று என்று கூறப்படுகிறது.

முஷாரப்பின் இந்த பண்ணை வீட்டுக்குள் புகுந்து அவரைத் தாக்கிக் கொல்ல தெஹரீக் , தலிபான் பாகிஸ்தான், சிபா , சஹாபா பாகிஸ்தான் ஆகிய இரு அமைப்புகளும் திட்டமிட்டுள்ளனர்.

முஷாரப்பைக் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக வந்துள்ள செய்தியைத் தொடர்ந்து அப்படி ஏதும் நடந்து விடாமல் தடுக்கும் வகையில் அத்தனை துறைகளையும் பாகிஸ்தான் அரசு உஷார்படுத்தியுள்ளதாம்

தலிபான்களின் எதிரிப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் முஷாரப். 2007ம் ஆண்டு லால் மசூதியில் நடந்த தாக்குதலால் அவர் மீது தலிபான்கள் கடும் கொதிப்பில் உள்ளனர். அந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் ராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் 3 முறை கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியவர் முஷாரப் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by

Leave a comment