தாகம் தீர்த்த வெள்ளி இரவு (சுஹதாக்கள் தின கவிதை)

LTTE%20Kattankudi%20Muslim%20Mosque%20Massare%2019[1]-MJ

இறைவனை தொழுமிடம்

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த –அந்த

இஷாத் தொழுகையின் இரவில்

இறக்கமில்லா மானிட வேட்டைக்கு நம் உறவுகள்

இரையாகிப்போன அந்த நாள் இன்று.

︻┳テ=一       ︻┳テ=一     ︻┳テ=一

கைத்தொலைபேசி இல்லை

கையடக்க கருவிகளும் இல்லை

முகநூலில்லை மின்னஞ்சலில்லை

மொத்தத்தில் இணையமே இல்லை

︻┳テ=一       ︻┳テ=一     ︻┳テ=一

வாய்விட்டு கூற முடியாமல்

வாயடைக்கவைத்த காத்த நகரை

உலகம் விழிக்கச் செய்த  நாள் இந்நாள்.

︻┳テ=一       ︻┳テ=一     ︻┳テ=一

அச்சு ஊடகங்களும்

‘ஆல் இந்திய  ரேடியோ’வும்

‘பி.பி.சி. தமிழோசை’யும்

உலகுக்குப் பறைசாட்டின

பாசிசப்புலிகளின் வெறித்தனத்தை

︻┳テ=一       ︻┳テ=一     ︻┳テ=一

எலிப்பொந்துக்குள் ஒழிந்து

பதுங்கியிருந்த புலிகளுக்கு புல்லரிக்கவே

முஸ்லிம்களின் பொருட்களைச்

சுரண்டிப் பார்த்தனர்.

︻┳テ=一       ︻┳テ=一     ︻┳テ=一

பொருட் சுரண்டலில் 

சுண்டல்  ருசிகண்ட  புலிகளின் நாக்கில்

எச்சில் ஊரியது…

தாகம்.. தாகம் எனும் தமிழீழத் தாகம்

புலிகளின் நர வேட்டைக்கு வழிவிட்டது.

︻┳テ=一       ︻┳テ=一     ︻┳テ=一

காத்தநகரில்

பின்னிப் பிணைந்து

உண்டு மகிழ்ந்த புலிகளுக்கு

மக்களின் உதிரமும் தேவைப்பட்டது

︻┳テ=一       ︻┳テ=一     ︻┳テ=一

பாய்ந்தன ரவைகள்

வெடித்தன குண்டுகள் சல்லடையாகின..

பள்ளிச் சுவர்கள் மாத்திரமல்ல

பாலகர்கள் முதல் முதியோர்களின் உடல்களும்

︻┳テ=一       ︻┳テ=一     ︻┳テ=一

இறை இல்லம்

இரத்த வெள்ளமாய் காட்சியளிக்கிறது

மக்கள் அழுகின்றனர்..

உறவுகள் துடிக்கின்றனர்

உயிர்கள் வானை நோக்கி பிரியவே

ஸஹீதுகள் வீழ்கின்றனர்

இரத்தம் தோய்ந்த ஆடைகளுடன்

︻┳テ=一       ︻┳テ=一     ︻┳テ=一

பசுத்தோல் போர்த்திய

புலி வேசம் உண்மை என்பதை

பறைசாற்றிய இந்நாளில்

எதிரிகளும் துடிதுடித்து  மடிந்துவிட்டனர்-

பிளவுபட்டும் பிரிந்துவிட்டனர்

︻┳テ=一       ︻┳テ=一     ︻┳テ=一

நீதியான இறைவனே!

உன் இல்லத்தில் இரத்தம் சிந்தி

உயிர்நீத்த உன் அடியார்களை மன்னித்து,

அவர்களை உன் விருந்தினர்களாக கௌரவித்துக்கொள்.

LTTE%20Kattankudi%20Muslim%20Mosque%20Massare%2019[1]
மெத்தைப்பள்ளி வாயலில் ஜனாஸாக்கள் குளிப்பாட்டப்படும்போது

Published by

Leave a comment