தமிழ்-முஸ்லிம் மக்களிடையே இனநல்லுறவை கட்டியெழுப்பும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

DSC08143[1]– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே இனநல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மகாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தலைமையில் இடம்பெற்றது.

 இந்த புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் விஷேட மாரக்க சொற்பொழிவை கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரி.எம்.ரிஸ்வி (மஜீதி) நிகழ்த்தினார்.

 இந்நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் வாசுதேவன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர். இரா.நெடுஞ்செழியன், மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத் தலைவர் உட்பட அதன் அங்கத்தவர்கள் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள்’மும்மதப் பெரியார்கள், ஊடகவியலாளர்கள் அரச அதிகாரிகள் வர்த்தக பிரமுகர்கள் உட்பட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

 மட்டக்களப்புமாவட்ட அரசாங்க அதிபரும் ,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று முன்தினம்  நடாத்திய தமிழ்-முஸ்லிம் இனநல்லுறவு இப்தார் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் 5வது இப்தார் நிகழ்வென்பது குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment