குருதியில் குளித்த கருப்பு இரவு (சுஹதாக்கள் தின கவிதை)

LTTE%20Kattankudi%20Muslim%20Mosque%20Massare%2017[1]-பிரகாசக்கவி

அழகிய இஷாப் பொழுது  

குருதிக் குளியல் குளித்து  

வேட்டுகளின் தாலாட்டோடு  

பாசீசத்தின்  தும்பிக்கைக்குள்  

துரும்பாகிப் போன  கருப்பு இரவு

➼   ➼  ➼  ➼  ➼  ➼  ➼  ➼

 ஒரே கப்ரில்  

ஒற்றுமையாய் நீங்களெல்லாம்  

அடங்கப்பட்டுப் போன போதுதான்

ஆயிரம் ஆயிரம்  முஸ்லிம் உம்மாவின்  கல்புகளில்லெல்லாம்  

ஒற்றுமையின் பலமும்  

சகோதரத்துவத்தின் மாண்பும்  விதைக்கப் பட்டதில்….

➼   ➼  ➼  ➼  ➼  ➼  ➼  ➼

நிசப்த பெரு மூச்சோடு  

அமைதியாய் உள்ளம்  அல்ஹம்துலில்லாஹ் சொல்லி  

வல்லோனை புகழத்தான் செய்தது

➼   ➼  ➼  ➼  ➼  ➼  ➼  ➼

ஆடுக்கும் மாடுக்கும்தான்  

ஐந்தறிவு என்று  அகராதியில் அச்சாகிப்போன  

தலையெழுத்து எல்லாம்  இன்று

பாசீச பன்னாடைகளுக்கும்  சரி சமமாய் போயிற்று

➼   ➼  ➼  ➼  ➼  ➼  ➼  ➼

கலிமா மொழிந்த  கல்புகள் என்பதனால்  

அகிம்சையின்  அச்சானிக் கொம்பில்  

அமைதியாய் எம் உம்மதிருக்க

➼   ➼  ➼  ➼  ➼  ➼  ➼  ➼

சுவனத்தில்  சுகதாக்கள் நீங்களெல்லாம்  

ரோஜாக்களில்  அழகிய ரோஜாக்கலாகவும்

ராஜாக்களில்  ராஜாதி ராஜாக்கலாகவும் இருப்பதில்  

அல்லாஹு அக்பர் !

LTTE%20Kattankudi%20Muslim%20Mosque%20Massare%2017[1]
மெத்தைப்பள்ளி வாயலில் ஜனாஸாக்கள் கொண்டுவரப்பட்டபோது..

Published by

Leave a comment