காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் 2013 கடந்த அரை வருடத்துக்கான பொலிஸ் பரிசோதனை

kattankudy police– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி  பொலிஸ் நிலையத்தின் 2013 கடந்த அரை வருடத்துக்கான பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு இன்று புதன்கிழமை காலை மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரிக்கு பின்பாகவுள்ள விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இவ் பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.மெவன் சில்வா கலந்துகொண்டு மேற்படி  பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார்.

 இங்கு பொலிஸ் பரிசோதனை விளையாட்டு மைதானத்திலும்,  பொலிஸ் வாகன பரிசோதனை காத்தான்குடி பொலிஸ்  நிலையத்திலும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. மெவன் சில்வா, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன, காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ரணசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறிப்பு. புதிய மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ள மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.மெவன் சில்வா பதவியேற்றபின் காத்தான்குடி  பொலிஸ் நிலையத்திற்கான பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை இடம்பெறுவது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

kattankudy police

kattankudy (2)

kattankudy (3)

kattankudy (4)

Published by

Leave a comment