காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த குடும்பம் சகிதம் கலந்து கொள்ளும் இப்தார் நிகழ்வு

– பழுலுல்லாஹ் பர்ஹான்

 காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த குடும்பம் சகிதம் கலந்து கொள்ளும் இப்தார் நிகழ்வு கடந்த 28.07.2013 இஸ்லாமிக் சென்றர் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மறுமை வாழ்வு எனும் தலைப்பில் அஷ்ஷேய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) சொற்பொழிவு நிகழ்த்தினார்.

ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என 500க்கு மேற்பட்டவர்கள் இவ் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நோன்பு திறக்கும் நிகழ்வு பள்ளிவாயலை அன்மித்துள்ள பகுதியில் வாழும் ஏழைச் சகோதரர்களின் நலன் கருதி தொடராக நடைபெற்று வருவதுடன் நோன்பு காலம் முழவதும் தொடராக தினசரி நோன்புக் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment