– பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: பறகஹதெனிய ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் அனுசரனையுடன் தந்தையை இழந்த அனாதை மாணவர்களுக்கான பெருநாள் ஆடைகள் மற்றும் கொடுப்பணவுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நிலையத்தின் உபதலைவர் அஷ்ஷேய்க் அன்ஸார் (மதனி) தலைமையில் நடைபெற்றது.
காத்தான்குடி மற்றும் அன்மித்த கிராமங்களைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு நோன்புப் பெருநாளைக்கான ஆடைகள் மற்றும் அவர்களது கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான நிதியுதவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் அனாதைகளுக்கான பிரிவின் பொறுப்பாளர்கள், காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் நிருவாகிகள் மற்றும் மாணவர்களின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.



Leave a comment