உலகக் கிண்ண இருபது20 மகளிருக்கான தகுதிகாண் இறுதிப்போட்டி இன்று: இலங்கை, பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சையில்!

srilanka-MJ

டுப்ளின்: அயர்லாந்தில் இடம்பெற்றுவந்த இருபது20 மகளிர் உலகக் கிண்ணப்போட்டிக்கான தகுதிகாண் சுற்றுப்போட்டியில் இன்று 31-07-2013 இலங்கை மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் விளையாடுகின்றன.இப்போட்டி டுப்ளின் நகரில் உள்ளுர் நேரப்படி காலை 10 மணிக்கு ஆரம்பமாகிறது. இறுதிக்கிண்ணம், இறுதிக் கேடயம் என இரு வேறு போட்டிகள் இன்று இடம்பெற இருக்கின்றன.

இறுதிக் கேடயத்துக்கான போட்டியில் தாய்லாந்து மகளிர் அணியும், சிம்பாப்வே மகளிர் அணியும் மோதுகின்றன.

எனினும், மகளிருக்கான  இருபது20 உலகக் கிண்ணப்போட்டிக்கு ஏற்கனவே அரை இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் தெரிவாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

srilanka

162959[1]

Published by

Leave a comment