மட்டக்களப்பு: மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்-சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ ஆகிய மதத்தவர்கள் 400 பேருக்கு மேல் கலந்து கொண்ட சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 30.07.2013 இன்று செய்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு சின்ன உப்போடை ஈஸ்ட் லகூன் நட்சத்திர ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ,சிங்கள மதத் தலைவர்களின் ஆசியுடன் மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் சமூக சேவையாளர் கே.எம்.எம்.கலீல் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இவ் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் புனானை 23வது இராணுவ படைப்பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி அதுல கொடிபிலி , நகர சபை தவிசாளர் அலிஸாஹிர் மௌலானா, மட்டக்ளப்பு வலய கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி மற்றும் தமிழ்-சிங்களம்,முஸ்லிம்,கிறிஸ்தவ மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களத்தின் உயர் அதிகாரிகள்,பாதுகாப்பு உயரதிகாரிகள் ,உலமாக்கள் ,வர்த்தக பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது விஷேட மார்க்க சொற்பொழிவை மட்டக்களப்பு மத்தி கல்வி வலய இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் அஷ்ஷெய்க் கபூர் மதனி நிகழ்த்தினார் அத்தோடு சமூக நல்லிணக்கம் தொடர்பான சிறப்புரை ஒன்று முன்னாள் காத்தான்குடி காழி நீதிபதி மஃரூப் கரீம் ஆசிரியரினால் நிகழ்த்தப்பட்டது.
இன்று இடம்பெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் அவ் அமைப்பின் தலைவர் சமூக சேவையாளர் கே.எம்.எம்.கலீல் ஹாஜியார் மற்றும் அவ் அமைப்பின் அங்கத்தவர் சமூக சேவையாளர் அஹமட் லெப்பை மீராசாஹிப் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.
இங்கு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் புனானை 23 இராணுவ படைப்பரிவின் இராணுவ கட்டளைத் தளபதி அதுல கொடிபிலி,மட்டக்களப்பு சிவில் அமைப்புக்களின் தலைவர் மாமாங்கராசா ஆகியோர் முக்கிய பிரமுகர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
இவ் இன நல்லுறவு பேணும் இப்தார் நிகழ்வு மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் வருடா வருடம் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இடம்பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment