தொடரும் கோஹ்லியின் சாதனைகள்….

kohli– OIT

புலவேயோ: மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் வைத்துள்ள சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இந்திய அணியின் கப்டன் விராத் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது.ஒரு நாள் போட்டிகளில் வேகமாக 5000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனைதான் இது.ரிச்சர்ட்ஸ் வசம் உள்ள இந்த சாதனையை முறியடிக்க கோஹ்லிக்கு இன்னும் 425 ரன்கள் தேவைப்படுகிறது.

சிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் அவர் 68 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் தொடரையும் வெல்ல உதவினார். ரிச்சர்ட்ஸ் ஒரு நாள் போட்டிகளில் 5000 ரன்களை எடுக்க 114 போட்டிகள் தேவைப்பட்டது. ஆனால் தற்போது கோஹ்லி 108 போட்டிகளை முடித்துள்ளார்.

அடுத்த ஐந்து போட்டிகளில் அவர் 425 ரன்களை எடுத்தால் சாதனையை முறியடிக்கலாம். 6 போட்டிகளை எடுத்துக் கொண்டால், ரிச்சர்ட்ஸின் சாதனையை சமன் செய்யலாம்.

இந்தியாவின் கங்குலிதான் இதற்கு முன்பு குறுகிய போட்டிகளில் 5000 ரன்கள் குவித்தவராக இருக்கிறார். அவர் 126 போட்டிகளில் இதைச் செய்துள்ளார்

அதேபோல மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் லாரா, 118 போட்டிகளில் 5000 ரன்கள் எடுத்துள்ளார். அந்த சாதனையையும் கோஹ்லி முறியடிக்கலாம். ஏற்கனவே விரைவாக 15 ஒருநாள் போட்டி சதங்களைப் போட்டு சாதனை படைத்துள்ளார் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது

Published by

Leave a comment