இரவு நேர தெரு விளக்குகள் இன்றி மக்கள் அவதி…காத்தான்குடி உள்ளக வீதிகளில் பலவும் இருளில்……

DSC00040AK-42-

புனித ரமழான் காலம் என்பதனால் கிழக்கு மாகாணத்தைப் பொருத்த மட்டில் முஸ்லிம் ஊர்களில் பெரும்பாலான பிரதான பஸார்கள் இரவு 10.00 மணியாகியும் கடைத் தெருக்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள்  இடம்பெற்று வருகின்றன.

 பிரதான வீதிகளின் மின் விளக்குகள் போடப்பட்டு இருந்தாலும் சில ஊர்களின் உள்ளக வீதிகளின் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருப்பதாக மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட பல வீதிகளின் தெரு விளக்குகள் பல அணைந்து வீதிகள் யாவும் பல நாட்களாக இருள் மயமாக  இருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கன்றனர்.

பிரதான வீதிகளின் விளக்குகள் யாவும்  எரிவதனால் பிரதான போக்கு வரத்துக்கு பிரயோசனம் இருப்பது போல்  உள்ளக வீதிகளின் மின் விளக்குகள்  எரியம் போதுதான் மக்கள் மிகுந்த பிரயோசனத்தைப் பெறமுடியும்.

காத்தான்குடியைப் பொறுத்த மட்டில் பிரதான வீதியை விட மக்கள் உள்ளக வீதியினையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.  இது ரமழான் காலம் என்பதனால் வெளித் தேவைகள் மற்றும் ”கியாமுல் லைல்” இரவு நெர தொழுகை்ககாக ஆண்கள்,பெண்கள்,சிறுவா்கள்,உலமாக்கள்,ஹாபிழ்கள் என பலரும் செல்வதனால்     இரவு நேர தெரு விளக்குகள் என்பது காலத்தின் தேவை அத்தியவசியமானதாகும்.

இக்காலப் பகுதியில் தான் பொது மக்களின் இராக்கால  நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவே தான் உள்ளக வீதியின் மின் விளக்குகளின் தேவைப்பாடு மிக  அவசியமாகும்.

இது விடயத்தில் பொறுப்பு வாய்ந்த சபைகள், நிறுவணங்கள்,  ஆட்சியிலுல்ள அரசியல் தலைமைகள் முதல் அதிகாரிகள் வரை கூடிய கவனம் செலுத்துவதுடன் அதற்காக ஆக்க புர்வமான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

பிரச்சினைகள் எதுவானாலும் பொது மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கடமையல்லவா………

மக்கள் மிகவும் அவதானத்துடன் உள்ளனர்-  ( WAIT AND  SEE )

Published by

Leave a comment