தமிழ்-சிங்கள,முஸ்லிம்,கிறிஸ்தவ மதத்தவர்கள் 400 பேர் கலந்து கொள்ளும் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 30ம் திகதி மட்டக்களப்பில்…..

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள,முஸ்லிம்,கிறிஸ்தவ ஆகிய மதத்தவர்கள் 400 பேர் கலந்து கொள்ளும் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு ஏதிர்வரும் 30.07.2013 செய்வாய்க்கிழமை பி.ப.5 மணிமுதல் பி.ப.6.30 மணிவரை..  மட்டக்களப்பு சின்ன உப்போடை  ஈஸ்ட் லகூன் நட்சத்திர ஹோட்டல் அரங்கில் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் சமூக சேவையாளர் கே.எம்.எம்.கலீல் ஹாஜியார் தெரிவித்தார்.

இவ் இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் கிழக்கு மாகாண இரானுவ கட்டளைத் தளபதி,மட்டக்ளப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாரள்ஸ் மற்றும் தமிழ்-சிங்களம்,முஸ்லிம்,கிறிஸ்தவ மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் ,மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களத்தின் உயர் அதிகாரிகள்,பாதுகாப்பு உயரதிகாரிகள் வர்த்தக பிரமுகர்கள் உட்பட பலமுக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

2013 இம்முறை இடம்பெறும் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் அவ் அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல் ஹாஜியார் மற்றும் அவ் அமைப்பின் அங்கத்தவர் சமூக சேவையாளர அஹமட் லெப்பை மீராசாஹிப் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம்பெறவுள்ளது.

இவ் இன நல்லுறவு பேணும் இப்தார் நிகழ்வு மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் வருடா வருடம் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இடம்பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு கடந்த வருடம் மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இடம்பெற்ற இன நல்லுறவு பேணும் இப்தார் நிகழ்வின் சில படங்கள் வாசகர்கள் பார்வைக்காக…………..??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

Published by

Leave a comment