கொழும்பு: நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஷ்ஷெய்க் ஐயூப் அஸ்மின் நளீமி என்பவரை முஸ்லிம்களின் சார்பான வேட்பாளராக நிறுத்தியுள்ளது. மன்னார் மாவட்டத்திற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பத்திரத்தில் அஷ்ஷெய்க் ஐயூப் அஸ்மின் நளீமி இன்று மாலை 05:20 மணியளவில் கையெழுத்திட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கு முஸ்லிம்கள் சார்பான கோரிக்கைகளையும், முஸ்லிம் மாகாணப் பிரதிநிதித்துவ ஒழுங்கையும் உள்ளடக்கியதான முதற்கட்ட திட்ட வரைவொன்று முஸ்லிம் கல்விமான்கள் குழுவினரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைப்பீடத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும்,
இதுதொடர்பான இறுதி வரைவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை வடிவமைக்கப்பட்டு இருதரப்பினராலும் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படுமென்றும் முஸ்லிம் கல்விமாகள் குழுவிலுள்ள பிரமுகர் ஒருவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment