பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் மக்களுக்கு கடந்த இரண்டாண்டுகளாக சிறப்பாக நடத்திய புனித ரமழான் மாத கடைசிப் பத்து நாட்களுக்கான கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இவ்வருடமும் (1434 / 2013) கீழ்க்கண்ட முறையில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்…
நாள்:
28.07.2013 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஃ திங்கட்கிழமை அதிகாலை (ரழமான் பிறை 20) முதல் 08.08.2013 (ரமழான் மாத கடைசி) வரை…
நேரம்:
தினந்தோறும் நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 2:15 மணி வரை…
இடம்:
தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்,
அல் மிக்தாத் பின் அம்ர் (ரழி) பள்ளிவாசல்,
ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில், ஃகைத்தான், குவைத்.
நிகழ இருப்பவை:
கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை
குர்ஆன் ஹல்கா
திருக்குர்ஆனை முறையாக ஓத தஜ்வீத் பயிற்சி
சிறப்பு இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி
பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பாழிவுகள்
திக்ரு ஃ
துஆ
மஜ்லிஸ்
தொடர் சொற்பாழிவு:
தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர் தமிழகத்தின் மூத்த ஆலிம் பெருந்தகை மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் ஆன்மீக அறிவொளி
அ. முஹம்மது ஷப்பீர் அலீ ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள்
நிறுவனர் ரூ முதல்வர், ஜாமிஆ மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரி, சென்னை
குறிப்பு:
நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டுஇ குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்டும்.
பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.
அனைவருக்கும் தேநீர், ஸஹர் உணவு ஏற்பாடு செய்யபட்டுள்ளது
குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும்இ நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் மு-வுiஉ சங்க நிர்வாகிகள்.
பகல் முழுவதும் பசித்திருந்து தாகித்திருந்து நோன்பிருப்போம்!
இரவு முழுவதும் இறைவனை வணங்கிக் கொண்டிருப்போம்!!
லைலத்துல் கத்ரை தேடி அல்லாஹ்விடம் தவமிருப்போம்!
இறுதிப் பத்தில் இறையருளை இணைந்தே இறைஞ்சுவோம்!!
அனைவரும் குடும்பத்துடன் வருக…! அன்பர்களையும் அழைத்து வருக…!! அல்லாஹ்வின் அளவிலா அருள்மழையில் நனைக….!!!
நன்றி! வஸ்ஸலாம்.
மேலதிக விபரங்களுக்கும்இ இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:மேலதிக விபரங்களுக்கும், இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:
துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல் முகவரிகள்: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹு குழுமம்: http: //groups.yahoo.com/group/K-Tic-group
கூகுள் குழுமம்: http://groups.google.com/group/q8tic
இணையதளம்: www.k-tic.com
—————-
என்றும் மாறா அன்புடன்…
குவைத்திலிருந்து…
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ.

Leave a comment