மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம்

பழுலுல்லாஹ் பர்ஹான்

DSC00028இன்று சனிக்கிழமை இடம்பெற்ற மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் 2013 கடந்த அரை வருடத்துக்கான பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை தொடர்பாக பரீசோதனையில் கலந்து கொண்ட மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் 27-07-2013 இன்று மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. மெவன் சில்வா தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் மட்டக்களப்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி. அனுருத்த பண்டார ஹக்மன ,மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.கே.கே.கிங்ஸ்லி குணசேகர , மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி சஞ்ஜீவ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு பரிசோதனையில் இடம்பெற்ற குறைபாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் ,நீண்டகால அனுபவங்கள் தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. மெவன் சில்வா சில்வாவினால் பொலிசாருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment