மட்டக்களப்பு: மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் 2013 கடந்த அரை வருடத்துக்கான பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை இன்று 27-07-2013 சனிக்கிழமை காலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இவ் பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.மெவன் சில்வா கலந்துகொண்டு மேற்படி பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார்.
இங்கு பொலிஸ் பரீசோதனை மற்றும் பொலிஸ் வாகன பரீசோதனை என்பன இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. மெவன் சில்வா, மட்டக்களப்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி. அனுருத்த பண்டார ஹக்மன, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.கே.கே.கிங்ஸ்லி குணசேகர , மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி சஞ்சிவ ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறிப்பு புதிய மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவியுயர்வு பெற்றுள்ள மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.மெவன் சில்வா மற்றும் புதிய மட்டக்களப்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி. அனுருத்த பண்டார ஹக்மன ஆகியோர் பதவியேற்ற பின் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கான பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை இடம்பெறுவது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment