பெண்களுக்கெதிரான வன்முறைகளை குறைத்தல் எனும் தலைப்பிலான ஐந்து நாள் செயலமர்வொன்று இன்று காத்தான்குடியில் ஆரம்பமானது

kattankudy (2)– நமது நிருபர்

காத்தான்குடி: பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் அனுசரணையுடன் இந்த செயலமர்வு நடைபெறுகின்றது.

காத்தான்குடி அந் நாசர் வித்தியாலயத்தில் நடைபெறும் இந்த செயலமர்வின் ஆரம்ப வைபவத்தில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சா மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி ஏ.சி.ஏ.அஸீஸ், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி முன்னணியின் பிராந்திய இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீல் உட்பட முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த செயலமர்வில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பைச்சேர்ந்த காத்தான்குடி மற்றும் மண்முனை வடக்கு, மன்முனைப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச்சேர்ந்த 50 தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று ஆரம்பமான இச் செயலமர்வு வியாழக்கிழமை நிறைவு பெறவுள்ளது.

kattankudy (2)

kattankudy

Published by

Leave a comment