காத்தான்குடி: “புதிய காதி நீதிபதியாக ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் நமதூர் மக்களது இன்ப துன்பங்களில் இரண்டறக் கலந்து நீண்ட காலமாக அர்பணிப்போடு செயலாற்றி வருபவருமான மதிப்புக்குரிய மௌலவி அல்ஹாஜ் அலியார் (பலாஹி) நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என சமூச சேவையாளரும் ஓ.எஸ்.ஏ. சமூக மதிப்பீட்டுக்கான நிறுவனத்தின் முதல்வருமான இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.
“நமதூர் பெண்கள் கௌரவமானவர்கள் இவர்களது திருமண பிணக்கு தொடர்பான விடயங்களை கையாழ்வதற்கு மூத்த உலமாவான இவர்கள் இப்பதவிக்கு மிகவம் பொருத்தமானவர்.
எனவே சமூகத்தில் நலிவற்றவர்களுக்காக உழைத்து வருகின்ற சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு என்ற வகையில் எமது பிராத்தனை கலந்த வாழ்த்தக்களைத் புதிய காதி நீதிபதிக்கு தெரிவித்தக் கொள்கின்றோம்” என ஓ.எஸ்.ஏ. சமூக மதிப்பீட்டுக்கான நிறுவனத்தின் முதல்வர் இல்மி அஹமட் லெவ்வை மேலும் தெரிவித்தார்.


Leave a comment