LANKA OREX FINANCE PLC- AL-Falah business unit காத்தான்குடி பிரிவின் இப்தார் நிகழ்வு காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள A1 Cottage Beach Resort இல் LOLC காத்தான்குடி கிளையின் முகாமையாளர் அல்ஹாஜ் ஏ.பீ.எம்.முனாஸ் BBA- தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்வு மாணவன்-எம்.எம்.முஆசிர் அவர்களின் கிறாஅத்துடன் ஆரம்பமானதுடன் கொம்பனியின் முகாமையாளர்,அதன் உத்தியோகஸ்தா்களின் முழுமையான பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு காத்தான்குடி வைத்திய அதிகாரிகள்,உலமாக்கள்,புத்தி ஜீவிகள்,ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள், வா்த்தகர்கள்,அரசியல் பிரமுகர்கள்,ஊடகவியளாலர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது விசேட பயான் நிகழ்வு ஒன்று அஷ்செய்ஹ் எம்.அன்சார்.(நழீமி)SLAS அவா்களினால் நிகழ்த்தப்பட்டதுடன் பாரிய நோய்க்கு உள்ளான காத்தான்குடி பாலமுனையினைச் சோ்ந்த ஒரு ஏழைச் சிறுவனுக்கு LOLC இன் காத்தான்குடி பிரிவினால் சத்திர சிகிச்சைக்கு என ரூபா-100000/=(ஒரு இலட்சம்)பணம் வழங்கி வைக்கப்பட்டது விசேட அம்சமாகும்.


பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நிதியுதவி வழங்கும் போது…………….. 





Leave a comment