மட்டக்களப்பு : ஐ.பி.சி.யி. தொழில்சார் தகமைகளை மேம்படுத்தும் கல்வியகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி,ஏறாவூர், வாழைச்சேனை, கல்குடா, வாகரை, வவுணதீவு, கொக்கட்டிச்சோலை, கறடியனாறு,ஆயித்தியமலை,வெல்லாவெளி ஆகிய 12 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் தெரிவு செய்யப்பட்ட பொலிசாருக்கு பல்வேறு பட்ட முறைப்பாடுகளும் அதனுடன் சம்மந்தப்பட்ட மக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் சம்பந்தமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மனித உரிமைகளும் அதனுடன் சம்பந்தபட்ட கட்டுக்கோப்புக்குள் செய்யப்படவேண்டிய முறைகளும் அதனை அமுல்படுத்தும் வழிகள் சம்பந்தமான செயலமர்வொன்று இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் நட்சத்திர ஹோட்டல் மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. மெவன் சில்வா மட்டக்களப்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி. அனுருத்த பண்டார ஹக்மன ,களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்க ,வாழைச்சேனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.கே.கே.கிங்ஸ்லி குணசேகர,மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ,பொலிஸ் நிலையங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ்,சிங்கள ,முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தரக்ள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு பல்வேறு பட்ட முறைப்பாடுகளும் மக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தளும் எனும் தலைப்பில் விரிவுரைகளை பொலிஸ் உயர்கல்வி பீடத்தின் பொறுப்பதிகாரியும் ,இளைப்பாரிய பிரதிப் பொலிஸ் மா அதிபரும் சட்டத்தரணியுமான தேசபந்து குனசேன உரை நிகழ்த்தினார் அதனைத் தொடர்ந்து மனித உரிமைகளும் அதனை காக்கும் பொலிசாரின் கடமைகளும் எனும் தலைப்பில் விரிவுரைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின் மட்டக்களப்பு பிராந்திய ஒருங்கினைப்பாளர் ஆர் மனோகரன் உரை நிகழ்த்தினார்.

Leave a comment