நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் 1200 பேருக்கு மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு-காத்தான்குடியில்

DSC09692– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில்  எம்.எப்.சி.டி. அமைப்பின் அணுசரனையுடன்  மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அமீர் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி தலைமையில் இடம்பெற்றது.

 1200 பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாபெரும் இப்தார் நிகழ்வில் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர்களான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான்,ஏ.ஜி.எம்.ஹாருன், பொறியியலாளர்           பளுலுல் ஹக், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான சபீல்,  நளீமி,நஸீர் மற்றும் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா சபை உறுப்பினர்கள் உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள் ,புத்திஜீவிகள் பெரும் திரளான பொது மக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

 இதன் போது விஷேட மார்க்க சொற்பொழிவை அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி நிகழ்த்தினார்.

குறிப்பு காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் புனித ரமளான் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக வருடா வருடம் நோன்பு திறக்கும் இப்தார் விஷேட நிகழ்வினை நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment