மௌலவி மர்ஹூம் சலாஹதீன் அவர்கள் சிறந்த ஆளுமையுள்ள சன்மாரக்க போதகர்: அமைச்சர் றிசாத் பதியுதீன்

Rishad-Bathiudeen_[1]இர்ஷாட் ரஹ்மதுல்லா

கொழும்பு: மூத்த சனமாரக்க போதகரும், நாடறிந்த இஸ்லாமிய அறிஞருமான மௌலவி சலாஹூதீன் அவர்களின் மறைவு குறித்து கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது ஆழ்ந்த கவலையினை தெரிவித்துள்ளதுடன், அன்னாரது சுவன வாழ்வுக்கு பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மௌலவி  மர்ஹூம் சலாஹதீன் அவர்கள் சிறந்த ஆளுமையுள்ள சன்மாரக்க போதகராவார், இலங்கை வானொலி முஸ்லிம் சேவை ஊடக இலங்கை முஸ்லிம்களுக்கு நன்கு பரீட்சையமான மௌலவி சலாஹூதீன் அவர்கள், அவர்களது காலத்தில் ஆற்றிய பணிகளுக்கான நற் கூலியினை இறைவன் அவர்களுக்கு அருள வேண்டும் என்றும் தாமும் பிரார்த்திப்பதாகவும், அவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அவரது மாணவர்கள் ஆகியோருக்கு தமது அனுதாபத்தையும் தெரவிப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment