– நமது நிருபர்
பிரதி பொலிஸ் மா அதிபர்,
மட்டக்களப்பு
ஐயா,
மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் பெண்கள் அமர்ந்து செல்வது தெடர்பாக
மேற்படி நான் தங்களின் மேலான கவனத்திற்கு இத்தால் அறியத்தருவது என்னவெனில் தற்போது மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணிக்கும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிக்க வேண்டுமென மோட்டார் போக்குவரத்து பொலிசார் வற்புறுத்தி வருகின்றனர்.
இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் சிரமங்களை எதிர் நோக்குவதுடன் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் பலத்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
காத்தான்குடி பிரதான வீதியினால் மோhட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணிக்கும் முஸ்லிம் பெண்களை கட்டாயமாக இரண்டு கால்களையும் இரண்டு பக்கமும் போட்டுச் செல்ல வேண்டுமென போக்குவரத்து பொலிசார் வற்புறுத்தி வருகின்றனர்.
முஸ்லிம் பெண்களில் பெரும்பாலானவர்கள் அபாய் மற்றும் ஹிஜாப் அணிந்து செல்பவர்கள்
இவ்வாறு அபாய் ஹிஜாப் உடையணிந்து கொண்டு முஸ்லிம் பெண்கள் மோட்டர் சைக்களின் பின் ஆசனத்தில் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிப்பது என்பது முஸ்லிம் பெண்களுக்கும் சாரி அணிந்து செல்லும் ஏனைய பெண்களுக்கும் சிரமமாக இருக்கும்.
எனவே இவ்விடயம் தொடர்பாக தங்களிடம் தொலைபேசியில் நான் கதைத்துள்ளதுடன் தங்களின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளேன்.
எனவே இந்த நடைமுறையை தளர்த்தி இந்த சிரமத்திலிருந்து பெண்களை விடுபடச் செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி
இவ்வண்ணம்.
ஜனாபா சல்மா அமீர் ஹம்சா,
நகர சபை உறுப்பினர், காத்தான்குடி,நகர சபை,
தலைவி, பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு

![woman-on-motorbike-sidesaddle[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/07/woman-on-motorbike-sidesaddle1.jpg?w=300&h=225)

Leave a reply to jhghhj Cancel reply