காத்தான்குடி: மட்டக்களப்பு பூநொச்சிமுனை மஸ்ஜிதுல் அஸ்மா பின் அபூபக்கர் பள்ளிவாயலில் ஷரீப்தீன் பவுண்டேஷனின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் செய்யத் அலவி ஷரீப்தீன் நளீமியின் ஏற்பாட்டில் 400 பேருக்கு விஷேட இப்தார் நிகழ்வொன்று இன்று வெள்ளிக்கிழமை மாலை பூநொச்சிமுனை மஸ்ஜிதுல் அஸ்மா பின் அபூபக்கர் பள்ளிவாயலில் அதன் தலைவர் ஏ.பி.ஏ.றசூல் ஜே.பி தலைமையில் இடம்பெற்றது.
இங்கு இப்தார் விஷேட மார்க்க சொற்பொழிவை அம்பாறை இறக்காமம் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் மௌலவி ஜவாஹிர் (பலாஹி) நிகழ்த்தினார்.
இவ் விஷேட இப்தார் நிகழ்வில் பூநொச்சிமுனை மஸ்ஜிதுல் அஸ்மா பின் அபூபக்கர் பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி அப்துர் ரஹீம் (பலாஹி), அலவி ஷரீப்தினின் இணைப்பாளர் எம்.சி.எம்.ஸாஹிர் ,மற்றும் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் புத்திஜீவிகள்,பாடசாலை அதிபர் பொது மக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
குறித்த ஷரீப்தீன் பவுண்டேஷன் பல்வேறு கல்வி மற்றும் இஸ்லாமிய ,சமூக அபிவிருத்தி பணிகளை மேற்கொன்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Leave a comment