காத்தான்குடி: மட்டக்களப்பு காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய முஸ்லிம் பிரதேசங்களுக்கான புதிய காதி நீதிபதியாக காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் காத்தான்குடிக்கான காதி நீதிபதி பதவிக்கான நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டது.
காத்தான்குடிக்கான காதி நீதிபதியாக கடமையாற்றிய ஏ.எம்.ஹிழ்ர் ஜேபி தனது பதவியினை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இராஜினாமா செய்ததையடுத்து ஏறாவூர் காதி நீதிபதி மௌலவி எம்.ஏ.மஜீட் காத்தான்குடிக்கான பதில் காதிநீதிபதியாக இதுவரையிலல் கடமையாற்றி வந்தார்.
இந்நிலையியே காத்தான்குடியின் புதிய காதி நீதிபதியாக மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் நிமிக்கப்பட்டுள்ளார்.
இவர் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவரும், காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் பிரதி அதிபரும், மட்டக்களப்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமாவின் தலைவருமான இவர் மூத்த அறிஞமாவார்.
கடந்த மாதம் இடம்பெற்ற காதி நீதிபதி நேர்முகப் பரீட்சைக்கு காத்தான்குடியிலிருந்து மூவர் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.


Leave a reply to mjm mufahir Cancel reply