பாராளுமன்றத்தில் பிரார்த்தனை செய்தார் ஹூனைஸ் பாருக் எம்.பி

– இர்ஷாட் ரஹ்மதுல்லா

hunaisபுனித நோன்பின் 17 ஆம் இரவு இன்றாகும். இந்த சந்தரப்பத்தில் உயர் சபையான பாராளுமன்றத்தில் எம்மை விட்டு பிரிந்த சென்றுள்ள முன்னால் அமைச்சர் மர்ஹூம் மஹ்ரூப் அவர்களின் ஞாபகார்த்த பிரேரணை மீது உரையாற்ற கிடைத்தமைக்கு எல்லாம் வல்ல அல்லாவுக்கு நன்றி கூறுவதுடன், மர்ஹூம் மஹ்ருப் அவர்களின் சுவன வாழ்க்கைக்கும் இறைவனை பிரார்த்தி்க்கின்றேன் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறினார்.

மேலும் அங்கு உரையாற்றுகையில் கூறியதாவது –

மர்ஹூம் மஹ்ருப் அவர்கள் கொழும்பு வாழ் அனைத்து மக்களாலும் விரும்பப்பட்ட ஒருவர், மதம் கடந்து மனித நேயத்துடன் செயற்பட்டவர் என்பைதை அவரது நகர சபை பிரவேசம், பாரளுமன்றப் பிரதி நிதித்துவமம் என்பன மூலம் நிருபனமான உண்மையாகும்.

இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம்கள் மிகவும் பொறுமையாக தமது நோன்பினை நோற்று மார்க்க கடமைகளில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் இந்த நாட்டில் உள்ள அமைப்புக்கள் முஸ்லிம்களை பிழையான பார்வை கொண்டு பாரப்பதுடன், விரும்பத்தகாத சம்பவங்களில் இந்த பெரும்பான்மை சிலல ஈடுபடுவது வேதனைதரும் விடயமாகும்.மஹியங்களை பள்ளிவாசலுக்குள் இடம் பெற்ற அந்த அநாகரிகமான செயலை நாம் கண்டிக்காமல் இருக்க முடியாது.

அன்று வடக்கில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களும், துரோகங்களும் அந்த அமைப்பினருக்கு இறுதியில் பெற்றுக் கொடுத்த லாபங்கள் என்ன என்பதை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள், முஸ்லிம்களுக்கு எதிராக மேள்கொள்ளப்படும் சம்பவங்களானது அது அம்மக்கள் மத்தியில் வேதனையினையே உருவாக்குகின்றது.

இவ்வாறு பாதிக்கப்படும் முஸ்லிம்கள்  தமது முறைப்பாட்டை இறை பிரார்த்தனை மூலம் வேண்டுகின்றனர்.அதற்கு இறைவனிடமிருந்து உரிய பதில் கிடைக்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் எமது மக்கள் இறை பிரார்த்தனைகளை செய்கின்றார்கள்.என்றும் சபையில் பிரார்த்தனை செய்தார் பாராளுமன்றத்தில் ஹூனைஸ் பாருக் .

Published by

Leave a comment