கர்பலா ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் முதலாவது இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

DSC09778– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் இயங்கிவரும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் முதலாவது இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி கடற்கரை வீதியில் மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை முன்பாக அமைந்துள்ள ஹொட் அன்ட் கூல் ரெஸ்டுரண்டில் இடம்பெற்றது.

இங்கு இடம்பெற்ற விஷேட இப்தார் நிகழ்வில் இஸ்லாத்தில் சமூகத்தின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு  எனும் தலைப்பில் விஷேட மார்க்க சொற்பொழிவை காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட அறபு மொழி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) நிகழ்த்தினார்

 ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் தலைவர் எம்.எச்.ஏ. றஷீத்  தலைமையில் இடம்பெற்ற இவ் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில், கர்பலா அல் மனார் வித்தியாலயத்தின் அதிபர் பரீட் மற்றும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 குறித்த ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு மட்டக்களப்பபு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கர்பலா, சிகரம், ஒல்லிக்குளம் ஆகிய குக் கிராமங்களில்  பாரிய சிரமாதனப் பணிகளை செய்து வருவதோடு மட்டுமன்றி கர்பலா கிராமத்தில் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு பணிகளை  செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

DSC09778

DSC09779

DSC09781

Published by

Leave a comment