மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து செல்லும் பெண்களுக்கு புதிய சட்டம் அறிமுகம்

woman-on-motorbike-sidesaddle[1]மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் இருந்து செல்லும் பெண்கள் இரண்டு பக்கங்களிலும் கால்களை வைத்து அமர்ந்து செல்ல வேண்டும் எனும் போக்குவரத்துச் சட்டம் தற்போது அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்களில் பின் ஆசனங்களில் இருந்து செல்லும் பெண்கள் ஒரு பக்கம் இருந்தே பயணித்து வருகின்றனர்.

தற்போது மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் இருந்தும் செல்லும் பெண்கள் இரண்டு பக்கங்களிலும் கால்களை வைத்து அமர்ந்து செல்ல வேண்டும். இது போக்குவரத்து சட்ட ஒழுங்காகும்.

imagesCABEL0PK

இந்த போக்குவரத்து சட்ட ஒழுங்கை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் பெண்கள் மற்றும் சாரி போன்ற உடை அணிந்து செல்லும் பெண்கள் மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிப்பதற்கு சிரமப்படுவது குறிப்பிடத்தக்கது.

– வீரகேசரி

Published by

3 responses to “மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து செல்லும் பெண்களுக்கு புதிய சட்டம் அறிமுகம்”

  1. Assalamu Alaikum(varah)
    indha website naan ipa than pathan.romba nalla visayangala nenga website la poduringa.romba usefula iruku.islam maarkam pathi neraya therinjika indha website helpfula irukum.thanks.Assalamu Alaikum(varah).

    1. நன்றி. தொடர்ந்தும் தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றோம்.

      – இயக்குனர்

  2. ASSALAMU ALAIKUM (VARAH…)
    INDHA WEBSITE IPA THAN PATHEN.ISLAM PATHI NERAYA NALLA VISHAYANGAL IRUKU.MASHA ALLAH.NEENGAL THODARNTHU INDHA SEVAI SEYA EN VAAZHTHUKAL.ASSALAMU ALAIKUM(VARAH…)

Leave a comment