லண்டன்: பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் புதிய வாரிசு, இளவரசர் வில்லியம் – கேட் தம்பதியருக்குப் பிறந்த குழந்தைக்கு, ஜோஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டது. பிரிட்டனில் இருக்கும் பந்தயம் கட்டும் நிறுவனங்களில் பெரும்பாலானவை, இந்தக் குழந்தைக்கு ஜோர்ஜ் என்றே பெயரிடப்படும் என்று கணித்திருந்தன.
கேட்-வில்லியம் தம்பதியரும் அவர்களின் குழந்தையும், பார்க்க்ஷையரில் இருக்கும் கேட்டின் பெற்றோர் வீட்டில் இருக்கிறார்கள். குழந்தை பிறப்பை முன்னிட்டு அங்கு பல விழாக்களும் அரச சம்பிரதாயங்களும் இடம்பெற்று வருகின்றன.
![_68921807_royalbaby[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/07/68921807_royalbaby1.jpg?w=640&h=360)
Leave a comment