காத்தான்குடி: காத்தநகர் வரலாற்றில் முதன் முறையாக மீரா பாலிகா தேசிய பாடசாலையிலிருந்து இம்முறை ஜப்பான் புக்கோக்கா நகரில் இடம்பெற்ற 52 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றிய 25வது ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் கலந்து கொண்டு வருகைதந்த 2012ம் ஆண்டு 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் 188 அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற சாதனையாளர் முகம்மட் லாபீர் பாத்திமா நிபாஸத்தை பாராட்டும் நிகழ்வும் விஷேட இப்தார் நிகழ்வும் இன்று புதன்கிழமை மாலை காத்தான்குடி மீரா பாலிகா பெண்கள் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் அல்ஹாஜ் எம். எம்இஸ்மாலெப்பை தலைமையில் இடம்பெற்றது.இதன் போது பரீட் பவுண்டேஸன் நிறுவனத்தின் பணிப்பாளர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரீஎம்.ஹாலித் ஜேபி ஆகியோரினால் சாதனையாளர் மாணவி எம்.எல்.எப்.நிபாஸத்துக்கு விஷேட பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரீஎம்.ஹாலித் ஜேபி,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பரீட் பவுன்டேஸன் நிறுவனத்தின் பணிப்பாளருமான கே.எல்.எம்.பரீட்,காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பாளர் சுபைர் மற்றும் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் புத்திஜீவிகள் ,கல்வியலாளர்கள் மாணவிக்கு கற்பித்த ஆசிரய ஆசிரியைகள் ,பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இரு வாரங்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் 2012 ஆம் ஆண்டில் 5ஆம் தரப் புலமைப்பரிசிற் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கூடிய புள்ளிகளைப் பெற்ற 6 மாணவ மாணவிகளை கல்வி அமைச்சு தெரிவு செய்தது இதில், 4 மாணவ மாணவிகள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்களவர்களாவர். மற்றைய இருவர்களுள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் மாணவரும், காத்தான்குடி மட்-மீரா பாலிகா தேசிய பாடசாலையைச் சேர்ந்த இம் முஸ்லிம் மாணவியுமாவார்.
இலங்கையில் இருந்து இம்மாநாட்டில் கலந்து கொண்ட ஒரே ஒரு முஸ்லிம் மாணவியான முகம்மட் லாபீர் பாத்திமா நிபாஸத் எனும் இம்மாணவி 2012ஆம் ஆண்டில் 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் 188 அதிகூடிய புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் தர வரிசையில் 3ஆம் இடத்தைப் பெற்று காத்தான்குடி கல்விச் சமூகத்திற்கும் ஊருக்கும் பெருமை தேடிக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment