ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் எல்லையில் கடந்த 7 மாதங்களில் 150 முறை சீனா ஊடுருவியிருப்பது தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் ஊடுருவல் தொடர் கதையாகி வருகிறது. மற்றொரு பிராந்தியமான லடாக் பிரதேசத்தில் இலக்கு வைத்து சீனா தொடர்ந்து ஊடுருவலை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 7 மாதங்களில் மட்டும் 150 முறை சுமர் பகுதியில் சீனா ஊடுருவலை மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக ஏப்ரல் மாதம் தெளத் பெக் ஒல்டி பகுதியில் 3 வார முகாமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சுமர் பகுதியில் கண்காணிப்பு கமராக்களை உடைத்து எடுத்துச் சென்றது, குதிரைகளில் வந்து மிரட்டிச் சென்றது போன்ற சம்பவங்களில் தொடர்ந்தும் சீன ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமர் பகுதியில் இந்திய எல்லைக்குள் 2 கிலோ மீட்டர் தூரம் சீன ராணுவம் ஊடுருவியிருக்கிறது. இது தொடர்பாக ராணுவ தலைமை தளபதி பிக்ரம்சிங் நேற்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனியை இது தொடர்பாக சந்தித்துப் பேசினார். இதேபோல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனனையும் சந்தித்த பிக்ரம்சிங், எல்லை நிலைமை குறித்து விவாதித்தார்.
![India-China-border-dispute[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/india-china-border-dispute1.png?w=150&h=89)
Leave a comment