சட்ட விரோத ஆஸி பயணங்கள்: 1500க்கு அதிகமானோர் இதுவரை கடலில் மூழ்கி உயிரிழப்பு

boatகொழும்பு: அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோத மாகப் படகுகள் மூலம் சென்றவர்களில் இதுவரை 1500 ற்கும் அதிகமானவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 2000 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியிலேயே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

2000 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 746 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 363 பேர் கடலில் மூழ்கியிருப்பதுடன் 350 பேர் தொடர்ந்து காணாமல் போனவர்களின் விபரங்களில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்களில் 22 பேர் தடுப்பு முகாம்களில் உயிரிழந்திருப்பதுடன் 11 பேர் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய பின்னர் கொல்லப்பட்டிருப்பதாக அச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு ஜுலை வரையான காலப் பகுதியில் தொழிற் கட்சியின் ஆட்சிக்கா லத்தில் 877 சட்ட விரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வுயிரிழப்புக்களில் 15 உயிரிழப்புக்கள் தற்கொலையால் இடம் பெற்றவையென வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 862 பேர் சட்ட விரோதமான படகுப் பயணம் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்டு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகை காணப்படுவதாக செய்திகள் சுட்டிக்காட் டுகின்றன. இருந்தபோதும் அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் சட்ட விரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சரியான முறையில் கணிப்பிடப்படவில்லை. அவ்வாறு கணிப்பிடப்பட்டால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகக் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

– தினகரன்

Published by

Leave a comment